நுண்ணீர் பாசன மேலாண்மை தகவல் அமைப்பு (MIMIS)
நுண்ணீர் பாசன மேலாண்மை தகவல் அமைப்பு (MIMIS)
தோட்டக்கலைத் துறை | வேளாண்மைத் துறை | சர்க்கரைத் துறை | வேளாண் பொறியியல் துறை

சேவை பெறும் முறை


விண்ணப்பித்தல்

 • நுண்ணீர் பாசன வகை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தை தேர்ந்தெடுத்தல்.
 • தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பித்தல்.

விலைப்புள்ளி

 • நில அளவை அடிப்படையில் பாசன அமைப்பை திட்டமிடுதல்.
 • நுண்ணீர் பாசன பொருட்களுக்கான மான்ய விபரம் மற்றும் விவசாயி பங்குத்தொகை விவரங்களை தெரிவித்தல்.

பணி ஆணை

 • விலைப்புள்ளி, கள ஆய்வு, விவசாயி ஒப்புதலுக்கு பின் தேர்வு செய்த நுண்ணீர் பாசன நிறுவனத்திற்கு பணி ஆணை வழங்குதல்.

பணி நிறைவு

 • வரையறுக்கப்பட்ட திட்ட மதிப்பீடு மற்றும் பணி ஆணைப்படி நுண்ணீர் பாசன நிறுவனத்தால் பணி நிறைவு மேற்கொள்ளப்படும்.

விண்ணப்பித்தல், விலைப்புள்ளி. பணி ஆணை, பணி நிறைவு போன்ற செயல்களின் விவரங்களை உடனுக்குடன் குறுஞ்செய்தி (sms) மூலமாக தெரிவிக்கப்படும்.
நுண்ணீர் பாசனம் என்பது ஒவ்வொரு துளி பாசன நீரையும் சிக்கனமாகவும் திறம்படவும் பயன்படுத்தும் ஒரு சீரிய தொழில்நுட்பமுறை. இதன் மூலம் உரங்களையும் பாசன நீர்வழியாக செடியின் வேர் பகுதிக்கு நேரடியாக செலுத்தலாம். நுண்ணீர் பாசனத்தில் சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்புநீர் பாசனம் என இரண்டு முறைகள் உள்ளது. விவசாயிகள் தங்களுக்கு விருப்பமான நுண்ணீர்பாசன நிறுவனத்தினை தேர்வு செய்யலாம். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பினால் இணையதளத்தில் பதிவு செய்யவும்.

நுண்ணீர் பாசனம் என்றால் என்ன?
நுண்ணீர் பாசனம் என்பது ஒவ்வொரு துளி பாசன நீரையும் சிக்கனமாகவும் திறம்படவும் பயன்படுத்தும் ஒரு சீரிய தொழில்நுட்ப முறையாகும். இத்தொழில்நுட்ப மூலம் உரங்களையும் பாசன நீர்வழியாக செடியின் வேர் பகுதிக்கு நேரடியாக செலுத்தலாம்.

நுண்ணீர் பாசன வகைகள்
நுண்ணீர் பாசனத்தில் சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்புநீர் பாசனம் என இரண்டு முறைகள் உள்ளது. சிறுகுறு விவசாயிகளுக்கு 100 சதவீதம்மானியம், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம்மானியம். அணுகவேண்டிய அலுவலர் சம்மந்தப்பட்ட வட்டார தோட்டகலை / வேளாண் உதவி இயக்குநர்

தேவைப்படும் ஆவணங்கள் :
 • விவசாயி புகைப்படம்
 • குடும்ப அட்டை நகல்
 • சிட்டா நகல்
 • அடங்கல் நகல்
 • நில வரைபடம்
 • கிணறு ஆவணம்
 • நீர் மற்றும் மண் பரிசோதனை ஆவணம்
 • வட்டாட்சியர் அலுவலரால் வழங்கப்பட்ட சிறு/குறு விவசாயி சான்றிதழ்
 • ஆதார் அட்டை நகல்
 • குத்தகை நிலமாக இருப்பின் 7 ஆண்டுகள் பதிவுசெய்யப்பட்ட குத்தகை ஒப்பந்தம் சொந்த கிணறு இல்லையெனில் அருகில் உள்ள உரிமையாளரிடமிருந்து தண்ணீர் பயன்படுத்த சம்மத கடிதம்.