change colors
Custom colors
change Font
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை
குறுகிய கால தோட்டக்கலை தொழில்நுட்பவியலாளர் பயிற்சி
(Horticulture Technician)
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையானது துடிப்பான ஒரு அங்கமாக செயல்பட்டு வருகிறது. தோட்டக்கலை சார்ந்த புதிய தொழில் தொடங்குதல் மற்றும் வேலை வாய்ப்புகளில் இளைஞர்களின் ஈடுபாடு அதிகரித்துள்ளது. மேற்படி, இiஞைர்களை தோட்டக்கலை தொழில்நுட்பத்தில் லாபகரமான முறையில் ஈடுபடுத்த குறுகிய கால தொழில்நுட்பயிற்சி அவசியமாகிறது.
எனவே, இத்துறையின் மூலம் இளைஞர்களை ஊக்கப்படுத்த குறுகிய கால தொழில்நுட்பவியலாளர் பயிற்சி 66 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 8 மணி நேர அளவில் தோட்டக்கலை அறிவியலில் பட்டப்படிப்பு பயின்று இத்துறையில் பணிபுரிந்து வரும் வல்லுநர்கள் மூலம் 500 நபர்களுக்கு ரூ.1.1423 கோடி நிதியில் இத்துறையின் கீழ் இயங்கி வரும் தோட்டக்கலை பயிற்சி மையங்கள் மற்றும் மகத்துவ மையங்கள் மூலம் பயிற்றுவிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சியானது கிராமபுற இளைஞர்களுக்கு சுய அல்லது வேலை வாய்ப்பினை அளிக்கும் நோக்கத்துடன் தோட்டக்கலை பயிர்சாகுபடி, தோட்டக்கலை செடிகள் உற்பத்தி, விதை உற்பத்தி, மலர் சாகுபடி, பாதுகாக்கப்பட்ட தோட்டக்கலை பயிர் சாகுபடி, ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மற்றும் உர மேலாண்மை மற்றும் அலங்கார தோட்டம் அமைத்தல் ஆகியவற்றில் நவீன தொழில் நுட்பங்கள் குறித்த பயிற்சி தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிதியின் மூலம் கீழ்க்கண்ட மையங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.
வ. எண். | பயிற்சி அளிக்கப்படும் மையம் | மொத்த பயிற்சி பெறுபவர்களின் |
---|---|---|
1. | உழவர் பயிற்சி மையம், உதகை, நீலகிரி மாவட்டம் | 100 |
2. | காய்கறி மகத்துவ மையம், ரெட்டியார்சத்திரம் திண்டுக்கல் மாவட்டம் | 100 |
3. | மத்திய தோட்டக்கலை ஆராய்ச்சி மையம், குடுமியான்மலை, புதுக்கோட்டை மாவட்டம் | 100 |
4. | தோட்டக்கலை மேலாண்மை மற்றும் ஆராயச்சி மையம், மாதவரம், சென்னை | 100 |
5. | தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம், தளி, கிருஷ்ணகிரி மாவட்டம் | 100 |
மொத்தம் | 500 |
மேற்கண்ட பயிற்சியானது தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகத்தின் விதிமுறைகளுக்குட்பட்டு நடத்தப்படும்.
குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 வயதுக்கும் மேற்பட்ட விருப்பமுள்ள இளைஞர்கள் தாங்கள் பயிற்சியில் கலந்து கொள்ள www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பயிற்சி இலவசமாக அளிக்கப்படும். மேலும் விவரங்கள் இவ்விணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
தோட்டக்கலை இயக்குநர்
To Apply Online Click Here
Application Form