change colors

#86bc42
#8373ce
#14d4f4
#72284b

Custom colors


change Font

Wednesday 24th Apr 2024
|

25 Days Gardener | Micro Irrigation Technician | Flowrist

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை

குறுகிய கால திறன் மேம்பாட்டு பயிற்சி

(Short term Skill Training / Gardener, Florist and Micro Irrigation Technician)

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களான நுண்ணீர் பாசனம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், மானாவாரி பகுதி மேம்பாடு, தேசிய தோட்டக்கலை இயக்கம், ஆகிய திட்டங்களில் நுண்ணீர் பாசன அமைப்புகள் நிறுவுதல், நிழல்வலைக் குடில்கள் அமைத்தல், பசுமைக்குடில் அமைத்தல் போன்ற தொழில்நுட்பம் தெரிந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வசதிகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. மேலும் இத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தோட்டக்கலை பண்ணைகள் மற்றும் பூங்காக்களிலும் தோட்டங்கள் வடிவமைத்தல், புல் தரை அமைத்தல் போன்ற பணிகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன.

தோட்டக்கலை சார்ந்த புதிய தொழில் தொடங்குதல் மற்றும் வேலை வாய்ப்புகளில் இளைஞர்களின் ஈடுபாடு தற்போது அதிகரித்து வருகிறது. இருப்பினும் வணிக ரீதியாக தொழில் மேற்கொள்வதற்கு முறையான பயிற்சி மற்றும் உந்துதல் அவசியமாகிறது.

இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, தோட்டக்கலைத் துறை தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து கிராமப்புற இளைஞர்களுக்கு குறுகிய கால திறன் மேம்பாட்டு பயிற்சிகளை மாவட்டம்தோறும் வழங்கிவருகிறது. தற்போது நுண்ணீர்பாசன தொழில்நுட்பவியலாளர் ( Micro Irrigation Technician), தோட்டக்கலை தொழில்நுட்பவியலாளர் (Gardener) மற்றும் பூந்தோட்டக்கலை தொழில்நுட்பவியலாளர் (Florist) பயிற்சி மாவட்டந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

குறைந்த பட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 வயதுக்கும் மேற்பட்ட விருப்பமுள்ள இளைஞர்கள் தாங்கள் விரும்பும் பயிற்சியில் கலந்து கொள்ள கீழ்க்கண்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து தாங்கள் விரும்பும் மாவட்டத் தோட்டக்கலை இணை / துணை இயக்குநர் அலுவலகத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு 044- 2852 4643 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்

To Apply Online Click Here Application Form