Thursday 28th Mar 2024
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை தமிழ்நாடு அரசு
முகப்பு | சுயவிவரம் | மாநில விபரங்கள்

மாநில விபரங்கள்

தமிழ்நாட்டின் ஏழு விதமான வேளாண் காலநிலைகளும், பல்வேறு விதமான மண் வளங்களும் கொண்டுள்ளதால் பழங்கள், காய்கறிகள், சுவைதாளிதப்பயிர்கள், மலைப்பயிர்கள், மருத்துவப்பயிர்கள், வாசனை திரவியப் பயிர்கள் மற்றும் பூக்கள் உற்பத்திக்கு ஏற்றதாக உள்ளது.

தேசிய அளவில் தமிழ்நாடு தோட்டக்கலை துறையில் முன்னோடி மாநிலங்களில் ஒன்றாக திகழ்கின்றது. (மத்திய அரசின் தோட்டக்கலைப் பயிர்கள் புள்ளி விவரம் - 2019-20 மூன்றாம் முன் மதிப்பீட்டின்படி) தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தியில் 5.31 சதவிகிதமும், பரப்பளவில் 4.99 சதவிகிதமும், தமிழகத்தின் தேசிய அளவு பங்களிப்பு ஆகும். தமிழகமானது பழங்கள் சாகுபடி பரப்பில் நாட்டின் மொத்தம் பரப்பில் 2.98 சதவீதத்தினையும் காய்கறிகள் பரப்பில் 4.63 சதவீதத்தினையும் கொண்டுள்ளது. தேசிய அளவில் உற்பத்தியில் பழங்களில் 5.1 சதவீதமும் காய்கறிகள் உற்பத்தியில் 3.9 சதவீதமும் பங்களிப்பு செய்கிறது.

மொத்த புவியியல் பரப்பான 130.05 இலட்சம் எக்டரில் தோட்டக்கலை பயிர்களின் பரப்பளவு 14.60 இலட்சம் எக்டராக உள்ளது. தமிழ்நாட்டின் முக்கிய காய்கறிப் பயிர்களான மரவள்ளி, வெங்காயம், தக்காளி, கத்தரி,முருங்கை மற்றும் வெண்டை சாகுபடி செய்யப்படுகின்றன. இவை மொத்த காய்கறிப் பயிர்களின் சாகுபடி பரப்பில் 75 சதவீதம் ஆகும். தமிழ்நாட்டின் பழங்கள் உற்பத்தியில் மா (50%) மற்றும் வாழை (29%) ஆகிய இரு பயிர்கள் மட்டும் பழப்பயிர்களின் மொத்த சாகுபடி பரப்பில் 80 சதவீதம் பங்களிப்பு செய்கிறது. ஆண்டு முழுவதும் திராட்சைப்பழம் உற்பத்தி மற்றும் பருவமில்லா காலங்களில் மா உற்பத்தி ஆகியவை தமிழகத்தின் தனித்தன்மையாகும்.

“வேளாண் உற்பத்தியை இருமடங்காக்கி, விவசாயிகளின் வருமானத்தை மும்மடங்காக பெருக்குவதே தமிழக அரசின் முக்கிய கொள்கையாகும்.” தோட்டக்கலைப் பயிர்களில் வீரியமிக்க மற்றும் பாரம்பரிய இரகங்கள் சாகுபடியை ஊக்குவித்தல், இடுபொருட்களை உரிய நேரத்தில் வழங்குதலை உறுதி செய்து மேலும், உயர்ரக தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் தோட்டக்கலையை இலாபகரமான தொழிலாக உயர்த்துதல், பண்ணை இயந்திரமயமாக்குதலை ஊக்குவித்தல் மற்றும் மேம்படுத்தப்பட்ட அறுவடை பின்செய் நேர்த்தி ஆகியவை அரசின் கொள்கைகளை அடைவதற்கு வழிவகுக்கின்றன.

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை செயல்படுத்தும் முக்கிய திட்டங்கள்

1. துளி நீரில் அதிகப்பயிர் என்ற உட்பிரிவில் நுண்ணீர் பாசனத்தின் கீழ் பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டம்

2. தேசிய தோட்டக்கலை இயக்கம்

3. தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம்

4. நீடித்த நிலையான வேளாண்மைக்கான தேசிய இயக்கம்

ஆ, மானாவாரி பகுதி மேம்பாடு

ஆ, பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம்

5. தேசிய ஆயுஷ் இயக்கம்- மருத்துவப் பயிர்கள்

6. தேசிய மூங்கில் இயக்கம்

7. தமிழ்நாடு பாசன வேளாண்மையை நவீன மயமாக்கல் திட்டம் (தோட்டக்கலை)

8. ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டம்

9. தோட்டக்கலை பயிர்களில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம்

10. தோட்டக்கலை பயிர்களில் கூட்டுப் பண்ணையம்

Original text