change colors

#86bc42
#8373ce
#14d4f4
#72284b

Custom colors


change Font

Thursday 28th Sep 2023
|
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை தமிழ்நாடு அரசு
Tanhoda Logo Millets Logo Kalaingar 100 Logo
முகப்பு | மானாவாரிப்பகுதி மேம்பாடு (RAD)

G.O's | Scheme Guidelines | Scheme Components

மானாவாரிப்பகுதி மேம்பாடு (RAD)

மானாவாரி பகுதி மேம்பாடு திட்டத்தின் நோக்கமே ஒருங்கிணைந்த பண்ணைய முறையை ஊக்குவித்து விவசாயிகள் நிலையான மற்றும் அதிக இலாபம் கிடைக்க வழிவகுப்பதேயாகும்.

இத்திட்டத்தின்கீழ் 100 எக்டருக்கு குறையாமல் விவசாய குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அக்குழுவிலுள்ள விவசாயிகள் இத்திட்டத்தின் மூலமாக பயன்பெறுவர். இத்திட்டமானது 60:40 மத்திய மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டுவருகிறது.

2021 – 22 ஆம் ஆண்டில், தோட்டக்கலை சார்ந்த பண்ணையம் (முக்கிய பயிர் - தோட்டக்கலை பயிர், ஊடுபயிர் – பருப்பு, எண்ணெய் பயிர்கள் முதலிய வேளாண்மை), மாடு வளர்ப்பு மற்றும் ஆடு வளர்ப்பு ஆகிய மூன்று இனங்கள் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் சாகுபடி செய்ய நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மண்புழு உரப்படுக்கை, விவசாயப் பயிற்சிகள் மற்றும் செயல்விளக்கங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டம் அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு,கள்ளக்குறிச்சி, கரூர், மதுரை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை,இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, திருநெல்வேலி, திருப்பத்தூர்,தூத்துக்குடி, திருப்பூர், திருவண்ணாமலை, திருச்சி, வேலூர், விழுப்புரம்,விருதுநகர் ஆகிய 23 மாவட்டங்களில் இவ்வாண்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.