Monday 11th Dec 2023
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை தமிழ்நாடு அரசு
முகப்பு | பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் (PKVY)

G.O's | Scheme Guidelines | Scheme Components

பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் (PKVY)

பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சித் திட்டமத்தின்கீழ், விவசாய கிராமங்களில் குழுக்கள் அமைக்கப்பட்டு, இயற்கை முறையில் சாகுபடி செய்து பங்கேற்பு உத்திரவாத சான்றிதழ் (PGS) பெற ஊக்குவிக்கப்படுகிறது. இத்திட்டமானது 60:40 என்ற மத்திய மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது மூன்றாண்டு தொடர் திட்டமாகும். இத்திட்டத்தின்கீழ், விவசாய குழுக்களுக்கு பயிற்சி வழங்கி, இயற்கை இடுபொருட்கள் உபயோகித்து, இயற்கை முறையில் சாகுபடி செய்து, தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, சிப்பம் செய்து, இயற்கை கண்காட்சிகள் நடத்தி,சந்தைப்படுத்த நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

2021 – 22 ஆம் ஆண்டில் இத்திட்டம், தேனி, திருவள்ளூர், தருமபுரி,ஈரோடு மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், இயற்கைவழி வேளாண்மை (Natural farming) முறையை ஊக்குவிக்க, பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின்கீழ், தேசிய இயற்கை வேளாண்மை திட்டம் (BPKP), 2021 – 22 ஆம் ஆண்டில் நீலகிரி, கோவை, நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Original text