change colors

#86bc42
#8373ce
#14d4f4
#72284b

Custom colors


change Font

Saturday 27th Apr 2024
|
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை தமிழ்நாடு அரசு
Tanhoda Logo
முகப்பு | தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் (NADP)

G.O's | Scheme Guidelines | Scheme Components

தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் (NADP)

தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் முக்கியமான நோக்கமே உயர் தொழில்நுட்பங்களைக் கொண்டு, பயிர் உற்பத்தித் திறனை அதிகரித்து விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதேயாகும்.

இத்திட்டமானது 60:40 மத்திய மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன், திட்டக்கூறுக்கேற்றாற்போல் மாநிலத்தின் எல்லா மாவட்டத்திலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2021 – 22 ஆம் ஆண்டில் இத்திட்டத்தின்கீழ், காய்கறிகளை இயற்கை முறையில் சாகுபடி செய்யவும், தோட்டக்கலைப் பயிர்களான முருங்கை, வெங்காயம், கீரைகள், டிராகன் பழம், சாகுபடியில் முக்கியத்துவம் குறைந்த பழப்பபயிர்கள் பனை மர நடவு, நிரந்தர பந்தல் அமைத்து சாகுபடி செய்தல், வழைத்தார் உறை உபயோகித்தல் முதலிய திட்டக்கூறுகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்கீழ் இரண்டு உபதிட்டங்கள் செயல்படுததப்பட்டுவருகிறது:

1. முந்திரி திட்டத்தின்கீழ், முந்திரி பயிர் சாகுபடி செய்ய நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

2. மாற்றுப்பயிர் சாகுபடி திட்டத்தின்கீழ், புகையிலை பயிருக்கு மாற்றுப்பயிராக காய்கறிகள் சாகுபடி செய்ய நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.