Friday 26th Apr 2024
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை தமிழ்நாடு அரசு
முகப்பு | கொள்கை | அறிவிப்புகள் | Honorable CM

அறிவிப்புகள்

1. நுண்ணீர் பாசன திட்ட செயலாக்கம்

நுண்ணீர் பாசன திட்டத்தை செயல்படுத்துவதை தமிழகம் கடந்த இரண்டு ஆண்டுகளாக முன்னிலையில் உள்ளது. 2018-19 ஆம் ஆண்டு 3.21 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் நுண்ணீர் பாசன அமைப்புகள் ரூ.700.69 கோடி நிதி செலவினத்தில் மேற்கொள்ளப்பட்டது. 2019-20 இல் 5.63 ஏக்கர் பரப்பளவில் நுண்ணீர் பாசன அமைப்புகள் ரூ.1,370.24 கோடி செலவினத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடப்பு 2020-21 ஆம் ஆண்டில் ரூபாய் 1884.97 கோடி நிதி ஒதுக்கீட்டில் 7.41 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் நுண்ணீர் பாசன அமைப்புகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நிதி : நுண்ணீர் பாசன திட்ட நிதி

2. தோட்டக்கலை பயிர்களுக்கான சிறப்பு மையம்

தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்காகவும் மற்றும் ஊட்டசத்து தேவைகளை பூர்த்தி செய்யவும் உதவுகின்றது. இதனை கருத்தில் கொண்டு நடப்பாண்டில் முந்திரி பயிருக்கு கடலூர் மாவட்டத்திலும், வெங்காய பயிருக்கு பெரம்பலூர் மாவட்டத்திலும், முருங்கைக்கு தேனி மாவட்டத்திலும், மஞ்சளுக்கு ஈரோடு மாவட்டத்திலும், எலுமிச்சைக்கு தென்காசி மாவட்டத்திலும் மற்றும் மிளகாய் பயிருக்கு தூத்துக்குடி மாவட்டத்திலும் சிறப்பு மையங்கள் அமைக்க ரூபாய் 18.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

நிதி : நபார்டு.

3. அரசு தோட்டக்கலை பண்ணைகளில் 325 மெட்ரிக் டன் காய்கறி விதைகள் உற்பத்தி செய்யப்படும்.

நடப்பு 2020-21 ஆம் ஆண்டு 325 மெட்ரிக் டன் காய்கறி விதைகள் அரசு தோட்டக்கலை பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நிதி : பண்ணை வரவின நிதி.

1. அரசு தோட்டக்கலை பண்ணைகளில் நாற்றாங்கால் மற்றும் விதை உட்கட்டமைப்பு வசதிகளை நிறுவுதல்.

இந்திய வேளாண்மை சார்ந்த பொருளாதாரத்தில் தோட்டக்கலை முக்கிய பங்கு வகிக்கிறது. தோட்டக்கலையானது சத்தான காய்கறிகள் மற்றும் பழங்கள் வழங்குவதன் மூலம் அன்றாட வாழ்வில் ஊட்டச்சத்து வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேம்படுத்தப்பட்ட காய்கறி வகைகள் / கலப்பினங்கள் / தொழில் நுட்பங்களின் வளர்ச்சி நடைமுறைப்படுத்தப்பட்டாளும் வளர்ந்து வரும் மக்கள் தொகையின் காரணமாக காய்கறிகளின் தனிநபர் தேவையும் அதிகரித்து வருகிறது. காய்கறிகள் மற்றம் பழங்களின் அன்றாட தேவையை பூர்த்தி செய்வதற்காகவும், கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களுக்கு சத்தான உணவை வழங்கு வதற்காகவும், ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் காய்கறி மற்றம் பழங்களின் சாகுபடி பரப்பினை அதிகரிக்க தோட்டக்கலைத்துறை திட்டமிட்டுள்ளது. காய்கறிகள் மற்றும் பழங்களின் பரப்பு விரிவாக்கத்திற்கு தேவையான விதைகள் மற்றும் நடவுச்செடிகள் இன்றியமையாதது. ஆகையால் பழ மற்றும் காய்கறிகள் பரப்பு விரிவாக்கத்தினை அதிகரிக்க அரசு தோட்டக்கலை பண்ணைகளில் விதை மற்றும் நாற்றாங்கால் உட்கட்டமைப்பு வசதிகளை ரூ.4000 இலட்சம் நிதி செலவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நிதி : தேசிய ஊரக வளர்ச்சி வங்கி நிதி (நபார்டு).

2. தோட்டக்கலை பயிர் சாகுபடிக்கான ஊக்கத் தொகை வழங்குதல்.

தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு நிலையான வருமானத்திற்கான ஒரு வழிகாட்டியாக தோட்டக்கலைத்துறை திகழ்கின்றது. இத்துறையானது மாற்று பயிர் சாகுபடிக்கான வாய்ப்பு அளிப்ப தோடு மட்டுமல்லாமல் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கியமான வாழ்விற்கும் ஆதாரமாகவும் விளங்குகிறது. குறுகியகால தோட்டக்கலைப் பயிர்களை பயிரிடுவதன் மூலம் அதிக வருமானம் கிடைப்பதால் சிறு மற்றும் குறு விவசாயிகள் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்வதை விரும்புகின்றனர். ஆனால், தோட்டக்கலைப் பயிர் பயிரிடுவதில் அவர்களுக்கு முக்கிய தடையாக இருப்பது அதிக சாகுபடி செலவுகள். ஆகையால், எதிர்வரும் 2020-21ஆம் ஆண்டு தோட்டக்கலைப் பயிர்களை பயிரிட விரும்பும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக ரூ.2500 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

நிதி : தேசிய தோட்டக்கலை இயக்கம், ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் மற்றும் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் .

3. தோட்டக்கலை பயிர்களில் இயற்கை சாகுபடியை ஊக்குவித்தல்.

ஆரோக்கியமான மற்றும் ரசாயனமில்லாத உணவு தொடர் மேலாண்மை சார்ந்த இயற்கை விவசாயத்தை செயல்படுத்துவதன் மூலம் விவசாயிகளிடையே இயற்கை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசானது அதிக கவனம் செலுத்தி வருகிறது. இயற்கை விவசாயத்தை மேம்படுத்துவதற்காக 2019-20 இல் தமிழகத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. காய்கறிகளில் பூச்சிக்கொல்லி மற்றும் இராசாயனங்களின் தாக்கம் அதிக அளவு இருப்பதால் நுகர்வோர் இடையே பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. காய்கறி சாகுபடியில் இயற்கை சாகுபடியை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, கீரை வகைகள், தக்காளி, கத்திரி, வெண்டை, முட்டைக்கோஸ் மற்றும் காலிஃபிளவர் போன்ற காய்கறிகளை இயற்கை சாகுபடி முறையில் மாற்றுவதற்காக மானியம் அளிப்பதோடு சூஞடீஞ சான்றளிப்பு முறையை கடைபிடிப்பதற்காக மானியம் வழங்குவதற்காகவும் ரூ.20 கோடி நிதி ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2020-2021ம் ஆண்டில் இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்ய ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

நிதி : தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் தேசிய தோட்டக்கலை இயக்கம்.

4. வெற்றிலைக்கான சிறப்பு மையம்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் வெற்றிலை பயிருக்கான சிறப்பு மையம் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

நிதி : நபார்டு.

5. டெல்டா மாவட்டங்களில் தோட்டக்கலை உயர் தொழில்நுட்பங்களை செயல்படுத்துதல்.

பசுமைக்குடில் சாகுபடி, நிழல்வலை குடில் சாகுபடி, பந்தல் சாகுபடி, நிலப்போர்வை மற்றும் சொட்டு நீர் பாசனம் உள்ளிட்ட நவீன தோட்டக்கலை தொழில் நுட்பங்களை டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே அறிமுகப்படுத்தி, வருமானத்தை உயர்த்திட காவேரி டெல்டா மாவட்டங்களில் 7500 ஏக்கர் பரப்பளவில் 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்ப தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டம், கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் முந்திரி விவசாயிகளின் நலனுக்காக 2020-21 ஆம் ஆண்டில் அடர் நடவு முந்திரி சாகுபடி திட்டம் 6 கோடியே 27 இலட்சம் செலவில் செயல்படுத்தப்டும்.

நிதி : தேசிய தோட்டக்கலை இயக்கம்,: நுண்ணீர் பாசன திட்டம் மற்றும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம்.

1. தோட்டக்கலை விளை பொருட்களுக்கான உற்பத்தியாளர் குழு உறுப்பினர்களுக்கு காய்கறி சேகரிப்பு மையங்கள் அமைத்தல்.

சந்தைக்கு காய்கறிகளின் வரத்தில் உள்ள இடர்பாடுகளை களைவதும், காய்கறிகளின் உற்பத்தியில் தொடங்கி பயனாளிகளை சென்றடையும் வழிகளை மேம்படுத்துவதே காய்கறி சேகரிப்பு மையங்களின் நோக்கமாகும்.காய்கறி சேகரிப்பு மையங்கள் நன்றாக செயல்படுவதற்கு அவற்றை முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் அருகிலும் தோட்டக்கலை பயிர்கள் அதிகம் விளைக்கூடிய மாவட்டங்களிலும் அமைத்தல் அவசியமாகும்.ஆர்வமுள்ள விவசாயிகளை ஒன்றிணைத்து விவசாயிகள் ஆர்வலர் குழு மற்றும் விவசாயிகள் உற்பத்தியாளர்கள் குழுக்கள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இக்குழுக்கள் காய்கறிகள் உற்பத்தி செய்யப்படும் இடங்களில் இருந்து காய்கறிகளை முதன்மை பதப்படுத்தும் நிலையங்களுக்கு கொண்டு சேர்பார்கள். இதன் மூலம் காய்கறிகள் தக்க நேரத்தில் சந்தைக்கு சேர்க்கப்படுவதுடன் அழுகி வீணாவது தடுக்கப்பட்டு சந்தையில் நல்ல விலை கிடைக்கவும் உதவுகின்றது. 2020-21 ஆம் ஆண்டில், 146 விவசாயிகள் ஆர்வலர்க்குழுக்கள் அமைத்திடவும், (ஊக்கத்தொகை நபருக்கு ரூ.500) 37 விவசாய உற்பத்தியாளர் குழுக்கள் அமைத்திடவும் (தலா ரூ.10,000 ஒரு குழுவிற்கு) மற்றும் 150 காய்கறி சேகரிப்பு மையங்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் அமைத்திடவும் ரூ.400 இலட்சம் நிதி ஒதுக்கப்பட உள்ளது.

நிதி : தேசிய ஊரக வளர்ச்சி வங்கி நிதி (நபார்டு), மற்றும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம்.

2. Establishment of Senganthal Poonga.

சென்னையில் பெருகி வரும் மக்கள்தொகை மற்றும் சமூகத்தின் வளர்ச்சிக்கேற்ப நகரமயமாக்கப்பட்ட மக்களுக்கு முக்கிய பொழுது போக்கு அம்சமாக சென்னை கத்தீட்ரல் சாலையில் உள்ள செம்மொழி பூங்கா விளங்கி வருகிறது. மேலும், பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப செம்மொழி பூங்காவிற்கு அருகில் சென்னை நகரின் மையப் பகுதியில் முக்கிய பொழுது போக்கு அம்சமாக செங்காந்தள் பூங்கா என்ற புதிய பூங்கா ரூபாய் 5 கோடி நிதி ஒதுக்கீட்டில் உருவாக்கப்படும். இப்பூங்காவானது பல்வேறு வகையான பச்சை தாவரங்கள் மற்றும் பொழுது போக்கு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட உள்ளது.

நிதி : பண்ணை வரவின நிதி.

3. மாவட்டம் தோறும் தோட்டக்கலை கண்காட்சிகள், போட்டிகள் மற்றும் சிறந்த தோட்டக்கலை சாகுபடியாளருக்கான விருது வழங்குதல்

மலர், காய்கறி மற்றும் பழ அலங்காரம் பார்வையாளர்களுக்கு ஒரு காட்சி விருந்தாகும். இந்த வகையான நிகழ்ச்சிகள் ஒருகாட்சி உபசரிப்பாக மட்டுமல்லாமல், மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும் தலமாகவும் உள்ளது. தோட்டக்கலை சிறப்பம்சங்கள் மற்றும் முக்கியத்துவத்தையும், பூக்கள், காய்கறிகள் மற்றும் பழங்களை சிறந்த அலங்கரிப்பாளர்களுக்கான போட்டியும் தோட்டக்கலை துறையினரால் நடத்தப்படும். மேலும் தோட்டக்கலைப் பயிர்களை பயிரிடும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக மாவட்ட அளவிலான (108 பரிசுகள்- 3 /மாவட்டத்திற்கு) மற்றும் மாநில அளவில் (3 பரிசுகள்) தோட்டக்கலை துறையின் மூலம் பரிசுகள் வழங்கி அவர்களின் சிறந்த செயல் திறனுக்காக சுழல் கோப்பைகள் மற்றும் ரொக்க பரிசு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் மலர் காய்கறி மற்றும் பழகாட்சிகள் நடத்துதல் மற்றும் சிறப்பாக செயல்படும் தோட்டக்கலை விவசாயிகளுக்கான விருதுகள் வழங்க ரூ.200.00 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

நிதி : தேசிய தோட்டக்கலை இயக்கம் , நுண்ணீர் பாசன திட்டம் மற்றும் பண்ணை வரவின நிதி.

4.வெங்காய சாகுபடியை ஊக்குவிக்கும் திட்டம் .

தமிழ்நாட்டில், ஆண்டு முழுவதும் வெங்காயம் பயிரிடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் - டிசம்பர் மாதங்களில் வெங்காயத்தின் உற்பத்தி குறைவதால் வெங்காயத்தில் விலை உச்சத்திற்கு செல்கிறது. இந்த இடைவெளியைக் குறைப்பதற்காக தேசிய தோட்டக்கலை இயக்கம் மற்றும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டங்களின் மூலம் விலை உறுதிப்படுத்தலுக்காக வெங்காயத்தின் பரப்பையும், உற்பத்தியையும் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள ரூ.500 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

நிதி : தேசிய தோட்டக்கலை இயக்கம் மற்றும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம்.

5. முருங்கை சாகுபடியை ஊக்குவிக்கும் திட்டம்.

முருங்கை வேகமாக வளரும் வறட்சிதாங்கக் கூடிய பயிராகும். முருங்கையில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் சுகாதார நன்மைகள் காரணமாக பல நூற்றாண்டுகளாக பயிரிடப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. முருங்கையின் இலைகள், பட்டை, பூக்கள், பழங்கள், விதைகள் மற்றும் வேர்கள் ஆகிய அனைத்து பகுதிகளும், மருந்து தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன. பூஞ்சை தடுப்பு, வைரஸ் தடுப்பு, அலர்ஜ்சி போன்ற மருத்துவ குணங்கள் உடையது. தற்பொழுது மதிப்புகூட்டப்பட்ட முருங்கை தயாரிப்புகளான முருங்கை இலை தூள், பென் ஆயில், முருங்கை தேயிலை தூள், காப்ஸ்யூல்கள் ஆகியவை விவசாயிகளுக்கு ஏற்றுமதி மூலம் அதிக வருமானத்தை ஈட்டுகின்றன. முருங்கைப் பயிரின் நன்மைகளைப் முழுமையாக பயன்படுத்தவும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும், 2020-21 ஆம் ஆண்டில் 35,000 எக்டர் பரப்பளவில் முருங்கை சாகுபடி செய்ய ரூ.500 இலட்சம் செலவில் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

Sநிதி : தேசிய தோட்டக்கலை இயக்கம், ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் மற்றும் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம்.

6. கல்வி நிறுவனங்களில் தோட்டக்கலை தொழில்நுட்பங்கள் சார்ந்த விழிப்புனர்வு ஏற்படுத்துதல்.

தோட்டக்கலை, ஆரோக்கியத்திற்கும் மனதிற்கும் தரமான உணவை வழங்குவதோடு மட்டுமல்லாமல் குறிப்பிட்ட பரப்பளவில் பயிரிடப்பட்ட பயிரிலிருந்து அதிக வருமானத்தை அளிக்கின்றது. உடல் நலம், செல்வம், சுகாதாரம் மற்றும் மகிழ்ச்சிக்கு தோட்டக்கலை இன்றியமையாதது. தோட்டக்கலை பயிர்களின் முக்கியத்துவம், செடி வளர்த்தல், பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி மாணவர்களிடையே பயிற்றுவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 2020-21 ஆம் ஆண்டு தோட்டக்கலை நுட்பங்களை தோட்டக்கலை இளநிலை பயின்றவர்கள், ஓய்வு பெற்றவர்கள் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் 1000 பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு பயிற்றுவிக்க ரூபாய் 120 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

நிதி : பண்ணை வரவின நிதி.

7. தொழில் முனைவோருக்கான நாற்றங்கால் மற்றும் விதை உற்பத்தி திட்டம்.

தோட்டக்கலை பயிர்களில் உணவு மற்றும் ஊட்டசத்து பாதுகாப்பை வழங்குவதில் காய்கறிகள் முக்கிய பங்கு வகிப்பதுடன், காய்கறிகளுக்கான தேவையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. காய்கறிகளின் உற்பத்தி கடந்த காலங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தினை பெற்றுள்ளது. பெரும்பாலும் காய்கறி பயிர்களில், விதைக்கான விலை உற்பத்தி செலவில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது, விதைகளின் விலையினை குறைக்க விவசாயிகளின் வயல்களில் காய்கறி விதை மற்றும் நாற்றுகள் உற்பத்தி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டில் விவசாயிகளில் வயல்களில் 330 மெட்ரிக் டன் விதைகள் மற்றும் நாற்றுகள் உற்பத்தி செய்ய ரூபாய் 750 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

நிதி: பண்ணை வரவின நிதி, தேசிய தோட்டக்கலை இயக்கம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் நுண்ணீர் பாசன திட்டம்.

8.கொல்லிமலையில் சுவைதாளித பயிர்கள் மற்றும் மூலிகைத் தோட்டம் அமைத்தல்

கொல்லி மலையானது நாமக்கல் மாவட்டத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள கிழக்கு தொடர்ச்சி மலையின் அமைதியான ஒரு பகுதியாகும். இம்மலையானது கடல் மட்டத்திலிருந்து 1000 முதல் 1300 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இம்மலைப் பகுதியில் வாசனை, சுவைதாளித மற்றும் மருத்துவப் பயிர்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. எனவே, இத்தகைய வளமான பகுதியில் இப்பயிர்களின் முக்கியத்துவம் மற்றும் சாகுபடியை ஊக்குவிப்பதற்காக ரூபாய் 1 கோடி நிதி ஒதுக்கீட்டில் வாசனை பொருட்கள் மற்றும் மருத்துவ பூங்கா அமைக்கப்படும்.

நிதி : பண்ணை வரவின நிதி

9. திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமத்தூரில் தேனீ பூங்கா அமைத்தல்.

வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள ஜவ்வாதுமலை கிழக்கு தொடர்ச்சி மலைகளின் விரிவாக்கம் ஆகும். இம்மலைப்பகுதியில் பலா, வாழை, சீதாப்பழம், மா, புளி, லிச்சி, மிளகு, புதினா, பால்மரோசா போன்ற தோட்டக்கலைப்பயிர்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. தேனீ வளர்ப்பு இம்மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கச் செய்கிறது. தேனீக்கள் அயல்மகரந்த சேர்க்கைக்கு முக்கிய பங்காற்றுவதால் விளைச்சலை அதிகரிக்க உதவுகின்றன. எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாதுமலையில் தேனி பூங்கா ரூபாய் 1 கோடி நிதி ஒதுக்கீட்டில் உருவாக்கப்படும். மாணவர்கள் மற்றும் தொழில் முனைவோர்களிடம் தேனி வளர்ப்பை ஊக்குவிக்கும் மையமாக இப்பூங்காவானது அமையும்.

நிதி : பண்ணை வரவின நிதி

10.புதுக்கோட்டை மற்றும் கடலூர் முந்திரி பயிர் அடர் நடவு சாகுபடி

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் முந்திரி விவசாயிகளின் நலனுக்காக, 2020-2021 ஆம் ஆண்டில் அடர் நடவு முந்திரி சாகுபடி திட்ம் 6 கோடியே 27 இலட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.

நிதி : தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் நுண்ணீர் பாசன திட்டம்.

Original text